09
Jan
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் நாசர்பேசியதாவது, "இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு. இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு. ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார். படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும்…