24
Jan
Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள்.மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா & ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்” படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்னர். தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோடியில் ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் நிலையில், ரத்தம் என்ற தலைப்பில் திரைப்படத் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம்…