பாகுபலியை மிஞ்சும் அளவில் உருவாகியுள்ள “விருஷபா” படத்தின் சண்டைக்காட்சிகள்!

பாகுபலியை மிஞ்சும் அளவில் உருவாகியுள்ள “விருஷபா” படத்தின் சண்டைக்காட்சிகள்!

நந்த கிஷோரின் "விருஷபா - தி வாரியர்ஸ் ரைஸ்" திரைப்படம் இந்தியாவில் உள்ள மைசூரில் முதல் ஒரு மாத கால ஷூட்டிங்கை முடித்துள்ளது. 22 ஜூலை 2023 அன்று தொடங்கிய படப்பிடிப்பில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கலந்துகொள்ள பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. விருஷபா திரைப்படம் மிகப்பெரிய ஆக்சன் படமாக இருக்குமென்பதை தயாரிப்பாளர்கள், ஒவ்வொருமுறையும் உறுதி செய்து வருகின்றனர். நிர்வாக தயாரிப்பாளராக ஹாலிவுட்டைச் சேர்ந்த நிக் துர்லோவை இணைத்த பிறகு, தயாரிப்பாளர்கள் மிகவும் பிரபலமான அதிரடி சண்டைப்பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்னை ஆக்சன் காட்சிகளை வடிவமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். பீட்டர் ஹெய்னின் ஆக்சன் வடிவமைப்பில் பாகுபலி, புலிமுருகன், சிவாஜி: தி பாஸ், கஜினி, எந்திரன் (ரோபோ), புஷ்பா: தி ரைஸ் - பாகம் 1 போன்ற பிரமாண்ட வெற்றிப்படங்கள் ஆக்சன் காட்சிகளுக்காக கொண்டாடப்பட்டது குறிப்பிடதக்கது. இயக்குநர் நந்த கிஷோர் கூறுகையில்,* “சமீபத்தில்…
Read More