23
Sep
கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் ! நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேலைக்கு பிறகு பெரும் நடசத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழு பணிகளும் முடிவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் நந்தா பெரியசாமி, ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P. ரங்கநாதன் கூறியதாவது… தர்மபிரபு படத்திற்கு பிறகு இது எனது இரண்டாவது படம். இயக்குநர் நந்தா பெரியசாமி முதலில் வேறோரு கதை தான் சொன்னார், ஆனால் அது எனக்கு சரிவரும் என தோணாததால் வேறொரு…