தனது வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தை பற்றி முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்!

தனது வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தை பற்றி முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்!

  சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது ஒரு மனிதனாகவும் பில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது பயணம் தடைக்கற்களைத் தாண்டி வந்த கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது மற்றும் தடைகளை எதிர்த்துப் போராடுவது, அதன் மூலம் கிடைத்த நிலையான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கனவுகளை நிறைவேற்றுவது என அவரின் வெற்றி பல நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. தற்போது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய ’800’ மூலம் அவரது இன்ஸ்பையரிங்கான வாழ்க்கை கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் பகிர்ந்து கொண்டதாவது, “இது எனது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டம். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதை விட, இளைய தலைமுறையினருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிக்கொணரும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்கியதற்காக மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் படத்தை வழங்கும் ஸ்ரீதேவி…
Read More
தனது 800 படத்தை பற்றி இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதியின் உருக்கமான பதிவு !

தனது 800 படத்தை பற்றி இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதியின் உருக்கமான பதிவு !

கிரிக்கெட் வீரர் முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறை பற்றி உருவாகியுள்ள 800 படம் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது, இந்நிலையில் இந்தப் படத்தை பற்றி இயக்குனர் சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி '800' படம் குறித்து கூறுகையில், “சில படங்களே திரைப்பட இயக்குநர்களுக்கு முழு திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற படங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. தனது கனவுகளை நிலைநிறுத்த அனைத்து எல்லைகளையும் தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு நான் பாக்கியம் செய்தவனாகவும் ஆசீர்வதித்தவனாகவும் உணர்கிறேன். முத்தையா முரளிதரன் சாரின் ஒரு சிறப்பு என்னவென்றால், அவர் கடல் கடந்தும் ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவர் களத்தில் ஒரு மந்திரவாதி. அவரது ஆட்டத்தை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். தவிர, அவரது பூர்வீகம் தமிழ்நாடு என்பதால், அவரை எப்போதும் தங்கள் 'மண்ணின் மகன்' என்றே ரசிகர்கள் கருதினர். முரளிதரன் சார் போன்ற ஒரு ஆளுமையை சந்தித்து அவருடன்…
Read More
நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையாவின் ‘800’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது!

நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையாவின் ‘800’ திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது!

  அனைத்து வயதினரையும் திரையரங்குகளுக்கு வர வைப்பது ஒரு கலை. இதுபோன்ற திரைப்படங்கள் மதிப்புமிக்க பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியான ஒரு திரைப்படமாக '800' உருவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸின் ‘800' திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கைக் குழு அதிகாரிகளிடமிருந்து 'யு' சான்றிதழுடன் பாராட்டையும் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முத்தையா முரளிதரன் கடல்களையும் நாட்டின் எல்லைகளையும் தாண்டி கிரிக்கெட் பிரியர்களின் மனதை வென்றவர். 'மன உறுதியும், ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒருவரின் கனவுகளை எதுவும் சிதைக்க முடியாது' என்பதை நிரூபித்து பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அவர் உள்ளார். ‘800’ திரைப்படம் அந்த அனுபவத்தை மீண்டும் திரையில் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். எம்.எஸ்.ஸ்ரீபதி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஷெஹான் கருணாதிலகாவுடன் இணைந்து ஸ்ரீபதி திரைக்கதை எழுதியுள்ளார். முரளிதரனாக மதுர் மிட்டல் நடிக்கிறார். இந்த படத்தில்…
Read More
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாவின் 800 பட பத்திரிகையாளர் சந்திப்பு!

  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (08.09.2023) சென்னையில் நடந்தது.     நடிகை மஹிமா நம்பியார், “என்னுடைய கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும். இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள்…
Read More
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீதேவி மூவீஸின் தயாரிப்பாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் '800' படத்தின் அகில இந்திய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளார். '800' முதலில் ஒரிஜினல் வெர்ஷன் தமிழில் படமாக்கப்பட்டது. இப்போது அது தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியிடப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர்…
Read More

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான '800' படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளில் வெளியாகிறது கிரிக்கெட் உலகில் ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை. மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பல்துறை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘800’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17 அன்று வெளியாக இருக்கிறது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது '800' படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார். இலங்கை,…
Read More