சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு!

சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு!

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம்,  அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது .தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர். அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.. செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி - P G வெங்கடேஷ் இருவரும் போட்டியிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.. குருநாதன்-  ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.. உப தலைவர்களாக  மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட்,  வீரராகவன் இனை செயலாளர்களாக p.செல்வராஜ் p.v.ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.. அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களின் பதவியேற்பு விழா வரும் 27ம் தேதி அன்று சென்னையில் நடக்கிறது
Read More
பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘தரன்’!

பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘தரன்’!

நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை  அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு  நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன்  "பிஸ்தா" படம் மூலம் அடைகிறார். பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், "மெட்ரோ" சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத்  பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை…
Read More
“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

“ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷன்” தூதரானார் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டுவருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்" என்ற பெயரில் இசைத்திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை முதன்முறையாக உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள "ஒன் ஹார்ட்" இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. "ஒன் ஹார்ட்" இசை படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர். "ஒன் ஹார்ட்"…
Read More