12
Sep
Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். நடிகர் மயில்சாமி பேசியதாவது... இந்தப்படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் விழா வைப்பார்கள். ஆனால் அது இப்போது நடப்பதில்லை ஆனால் சினிமா எந்த காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் எனக்கு கதை தெரியாது. ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் நடிகன்யா நீ என…