20
Apr
டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி இயக்குகிறார். நல்ல சினிமா ரசனையும், திரைப்படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான டிஜி விஸ்வ பிரசாத், சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். முன்னர் அறிவித்தபடி படக்குழுவினர் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு அறிமுக வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்கு எதிர்காலம் என்று பொருள்படும் எக்ஸ்ட்ராடினரி மிராய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு லோகோ ஜப்பானிய எழுத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு சூப்பர் யோதா தோற்றத்தில் கையில் யோ (ஸ்டாஃப் ஸ்டிக்) உடன், வெடிக்கும் எரிமலையின் மேல் நிற்பதைப்…