கதிஜா ரஹ்மானின்   மாயாஜால இசை !!

கதிஜா ரஹ்மானின்   மாயாஜால இசை !!

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான 'மின்மினி'யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்! மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் 'மின்மினி' படத்தில் நடந்துள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் 'எந்திரன்' படத்தில் வெளியான 'புதிய மனிதா...' பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் 'மின்மினி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் 'ரோஜா' படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா 'மின்மினி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான் பேசியிருப்பதாவது, "இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என்…
Read More
’மின்மினி’ பட டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா!

’மின்மினி’ பட டிரெய்லர் & ஆடியோ வெளியீட்டு விழா!

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக…
Read More
7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது “மின்மினி” படப்பிடிப்பு  !

7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது “மின்மினி” படப்பிடிப்பு !

  தனித்துவமான, தரமான திரைப்படைப்புகள் மூலம் தனது தனித்தன்மையை திறமையை நிரூபித்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம். பெரும்பாலான பெண் திரைப்பட இயக்குநரகள் பெண்களை மையமாகக் கொண்ட மற்றும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், ஹலிதா தனது ஃபீல்-குட் ரோம்-காம்ஸ் மற்றும் சிறந்த மென்மையான பொழுதுபோக்கு திரைப்படங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை வென்றார். சில்லு கருப்பட்டி, ஏலே, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான “புத்தம் புது காலை விடியாதா” என்ற ஆழமான உணர்ச்சிப்பூர்வமான படைப்பில் "லோனர்ஸ்" போன்ற அழகியல் ரீதியாக அவர் வழங்கிய கதைகள் நம்பிக்கையூட்டும் அணுகுமுறையுடன் நம்மை வசீகரிக்கின்றன. இவரைப் பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தை 7 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில அவர் ஒரு நோக்கத்திற்காக அடுத்த கட்ட படப்பிடிப்பை 7 ஆண்டுகளாக துவங்க…
Read More