10
Dec
ஒரு சின்ன பிளாஷ்பேக்.. 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் .ஒரு தகவல் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆர் எம் வீ அலுவலகம் போன போது அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. அந்நாளில் பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது வழக்கம் அந்த விஷயம் தெரிந்த நிலையிலும் நான் ”ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். உடனே “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் அந்த ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. இதைக் கண்ட எம்.ஜி.ஆர். வாய் விட்டு பாராட்டினார். தற்போது தமிழ் சினிமாவில் தனி ஆவர்த்தனம் செய்யும் P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு…