’மெய்ப்பட செய்’ வழக்கமான படமில்லை!

’மெய்ப்பட செய்’ வழக்கமான படமில்லை!

ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றை சொல்வதில்லை. பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே…
Read More
ஹீரோக்களுக்கு செலவு செய்வதற்கு பதில் கதைக்கு செலவு செய்யுங்கள் ” மெய்ப்பட செய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு

ஹீரோக்களுக்கு செலவு செய்வதற்கு பதில் கதைக்கு செலவு செய்யுங்கள் ” மெய்ப்பட செய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு

எஸ்.ஆர்.ஹர்ஷித்  பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து,  பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள்,  படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துகொண்டுள்ளார். தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது.…
Read More