29
May
பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது. மீனா சாப்ரியா பற்றிய சிறு விவரங்கள் 17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா. எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசியதாவது, நடிகை ஐஸ்வர்யா…