“மழை பிடிக்காத மனிதன்” பட விஜய் ஆண்டனிக்கு ஜோடி மேகா ஆகாஷ்!

“மழை பிடிக்காத மனிதன்” பட விஜய் ஆண்டனிக்கு ஜோடி மேகா ஆகாஷ்!

ShareTweet விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில் சத்ததையும் குவித்தது. தற்போது பன்முக திறமை கொண்ட கலைஞரான விஜய் ஆண்டனி அடுத்த படம் “மழை பிடிக்காத மனிதன் “ படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரையை தன் அழகால் வசியப்படுத்தும் தேவதை, மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார்.…
Read More