மாவீரனாக விஜய் சேதுபதியின் குரல் ! இப்படி ஒரு ட்விஸ்ட்டா !

மாவீரனாக விஜய் சேதுபதியின் குரல் ! இப்படி ஒரு ட்விஸ்ட்டா !

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புளுடன் வருகின்ற ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதில் சிவகார்த்திகேயன் வானத்தை பார்த்தால் வேறொரு ஆளாக மாறிவிடுவார். ஒரு குரலை கேட்டதும் இப்படி மாறி விடுவார்.   மாவீரன் படத்தில் அந்த குரலுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் அணுகியுள்ளனர்.ஆனால் அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் தான் மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இது அனைத்து தரப்பு ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  
Read More
பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் டைரக்ட் செய்யறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கிறாய்ங்க. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருது. இந்த படத்தின் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சில கருத்து வேருபாடுகள் இருந்து வந்ததாக சில வதந்திகளும் வெளியானது,தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் , மேலும் படம் நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்
Read More