15
Mar
கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'மரகத நாணயம்' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் - விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு 'மரகத புதையல்' ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு. விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே…