பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ இந்திப்படம் மூலம் பாலிவுட்டில் நாயகனாக கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா !!

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார். அஜித்குமார் நடிப்பில் 'மங்காத்தா' படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் 'பிக்பாஸ்' மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அவரது நடிப்பில் வெளியான 'ஈமோஜி' வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகையில், மாறுபட்ட கருப்பொருளில் இப்படம் உருவாகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி…
Read More
நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “2030” !

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “2030” !

நடிகர் மஹத் ராகவேந்திரா நடிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், “ONSKY Technology PVT. LTD” நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திரு.முத்து சம்பந்தம் வழங்கும் திரைப்படம் "2030" ! தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல, தரமான படைப்புகளை தரவேண்டுமென்கிற கனவுடன், ONSKY Technology PVT. LTD தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் திரு.முத்து சம்பந்தம். தற்போது தனது நிறுவனத்தின் முதல் படைப்பாக தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, ப்ளாஷ் பார்வேர்ட் ( Flash forward ) முறையில் கதை சொல்லும் 2030 படத்தினை துவக்கியுள்ளார். இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில், நடிகர் மஹத் ராகவேந்திரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தற்போதைய நோய் தோற்று பொதுமுடக்கத்தையும் அதன் பின்னணியில் கார்ப்பரேட் மருத்துவதுறையின் சதிகளையும் வெளிப்படுத்தும் கருவை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது. ONSKY Technology PVT. LTD நிறுவனர் திரு.முத்து சம்பந்தம் இது குறித்து கூறியதாவது.. திரைத்துறையில் எனது புதிய…
Read More