22
Jul
சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேர்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மடோனா அஸ்வின், "இந்தப் படத்தின் கூட்டணி அமைத்து, வெற்றியை சாத்தியமாக்கிக் கொடுத்தத் தயாரிப்பாளர் அருணுக்கு என்னுடைய முதல் நன்றி. நான் கதை சொன்னதிலிருந்து படம் முடியும் வரை எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல் முழு உழைப்பையும் கொடுத்த சிவகார்த்திகேயன் சார் மற்றும் படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கேட்டதும் உடனே ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், ரவி தேஜா சார், அற்புதமான நடிகை சரிதா மேம், யோகி பாபு சார், ஆர்ட் டிரைக்டர், மியூசிக் டிரைக்டர், யானிக் பென் மாஸ்டர் என படத்தில் வேலை பார்த்த ஒவ்வொருவரும் அவ்வளவு…