எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு  தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா

1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை. எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும்…
Read More