17
Sep
🎬கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா நேற்று (செப்டம்பர் 16) காலமானார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கிய படைப்புகளாகப் பார்க்கப்படுகிறது. இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார். ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினரால் 2019ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டார்.ஆனால் வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்து அடிப்பட்டு துடித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு பதறி தன் மடியில் வைத்து பிரான்சிஸ் கிருபா, அவரை இயல்பு…