நடிகை ஸ்ருதிஹாசனின் மற்றும் இயக்குனர் லோகெஷ் கனகராஜின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது!

நடிகை ஸ்ருதிஹாசனின் மற்றும் இயக்குனர் லோகெஷ் கனகராஜின் இனிமேல் ஆல்பம் பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது!

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகமானர். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது. இந்த ஆல்பம் பாடல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘இனிமேல்’ பாடல் மாடர்ன் உலக இளைஞர்களின் காதலின் அனைத்து நிலைகளையும் அதன் அனைத்து ஏற்ற இறக்கங்களுடனும் சித்தரிக்கிறது. இப்பாடல் ஒரு சமகால காதலின் வடிவத்தை கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது, இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. நடிகை ஸ்ருதி ஹாசன்…
Read More
நடிக்க ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

நடிக்க ஆர்வம் இல்லை! “இனிமேல்” ஆல்பம் விழாவில் லோகேஷ் கனகராஜ்!

  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.  இந்நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எப்படி ஒரு Loop ஆக செயல்படுகிறது. அந்த உறவுகளுக்குள் நிகழும் Ups And Downs இவைகளைப் பற்றியும் சொல்ல முற்பட்டேன். பின்னர் எனக்கு ஒரு கட்டத்தில் அந்த ‘இனிமேல்” என்கின்ற வார்த்தையைப் பின் தொடர்ந்து தமிழில் இதை…
Read More
ஃபைட் கிளப் திரை விமர்சனம்

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

இயக்கம் - அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் நடிகர்கள் - விஜய் குமார் , தயாரிப்பு - லோகேஷ் கனகராஜ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார்.   வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான். நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல்…
Read More
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படைப்பிற்கு ஃபைட் கிளப் என்று பெயர் வைத்துள்ளனர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படைப்பிற்கு ஃபைட் கிளப் என்று பெயர் வைத்துள்ளனர்!

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஃபைட் கிளப்'. இதில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம்…
Read More
படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”. நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற…
Read More
‘அவள் பெயர் ரஜ்னி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தலைவர் 171 பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

‘அவள் பெயர் ரஜ்னி’ பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தலைவர் 171 பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

  தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பில், 'விக்ரம்', 'நட்சத்திரம் நகர்கிறது' படங்கள் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி' என்பது குறிப்பிடதக்கது.தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது , இந்த நிகழ்வில் லோகெஷ் கனகராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்வில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது,…
Read More
ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !

  நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்க படத்தினை பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் ‘பிளாக்பஸ்டர் இயக்குநரான’ லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’’பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம்,…
Read More
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு  ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

தமிழ் திரையுலகினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ‘லியோ’ இந்தப் படத்தை இயக்குனர் லோகெஷ் கனகராஜ் இயக்குகிறார் . இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்திற்காக தயாராகிரார் நடிகர் விஜய், அந்த படம் முடிந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்துக்கு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். பார்லிமெண்ட் தேர்தல் வரும் நேரத்தில் ஒரு வருடம் படம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் இதனையடுத்து தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இது பத்திரிக்கையாளரிடம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது ‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர் களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
Read More
முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

முதல் படத்திலேயே இவ்வளவு சம்பளத்தை கேட்கிறாரா லோகேஷ் கனகராஜ்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனராக மாறியுள்ளவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து மாஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்றிருக்கிறார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு-அறிவு இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படத்திற்காக ரூபாய் 10 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

  Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது.., "படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."   தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது., " சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக…
Read More