19
Jun
கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் " லில்லி " என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் சிவம் பேசியதாவது..... இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். எத்தனையோ பெரிய நடிகர்கள் படம், இயக்குனர்கள் படம் பான் இந்தியா படமாக வெளியாகியிருக்கிறது ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து நேரடியாக உருவாகியுள்ள படம் இதுவாகத் தான் இருக்கும்.இது குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெரியவர்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதோடு நட்புனா என்ன, விட்டுக் கொடுத்தல்னா என்ன என்பதை உணர்வுபூர்வமாக எடுத்திருக்கிறோம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நிச்சயம் கண்கலங்க…