24
Apr
Srinivasaa Silverscreen ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார். அப்பாடலின் லிரிகல் வீடியோ வெளியீட்டு விழா திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நாயகி கீர்த்தி ஷெட்டி பேசியதாவது… வாரியர் படத்தின் இத்தனை பெரிய விழாவை பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. தமிழில் எனக்கு பிடித்த படம் “பையா” அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி சாருடன் வேலை பார்ப்பது பெருமை. நடிகர் ராம் மிகசிறந்த ஒத்துழைப்பு தந்தார். தேவி ஶ்ரீ பிரசாத் எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இப்படத்திற்கும் நல்ல இசையை தந்துள்ளார். தமிழில் படம் வராமலேயே எனக்கு பெரிய வரவேற்பு தரும் உங்களுக்கு பெரிய நன்றி. நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி பேசியதாவது… ஒரு படத்தில் லிரிக் வீடியோ…