17
May
சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ' 'கிகி'ஸ் டான்ஸ் ஸ்டூடியோ' எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து இயங்கவும் நடனத்தை கற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு கிகி சாந்தனு தொடங்கி இருக்கும் 'கிகி'ஸ்…