கோவா திரைப்பட விழாவில் வரவேற்பை குவித்த “கிடா (Goat)” திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். இந்நிலையில் இப்படம் சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவது மட்டுமல்லாமல் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது. 20 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22…
Read More
இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” !

உலகம் முழுக்க புகழ்பெற்ற திரைப்பட விழாவாக 80 வருடங்களாக நடந்து வரும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகி அசத்தியுள்ளது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமிழ் சினிமாவை உயர்த்தி பிடிக்கும் உன்னத படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கிடா”. மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் முழுதாக முடிந்தவடைந்த நிலையில், திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி அசத்தியுள்ளது. கோவா திரைப்படவிழாவில் இந்தியன் பனோராமா பிரிவில் மூன்று தமிழ்ப் படங்களில், ஒரு படமாக இப்படம் தேர்வாகியுள்ளது. தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும்,…
Read More