11
Apr
மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட…