ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள்! – விஜய் சேதுபதி அப்செட்!

ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள்! – விஜய் சேதுபதி அப்செட்!

ஸ்ரீசாய்ராம் கிரியே ‌ஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் வழங்கும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-டி.இமான், ஒளிப்பதிவு-சக்திவேல், எடிட்டிங்- டி.வி.விஜயன், ஸ்டண்ட்-மாஸ்டர் ராஜசேகர், தயாரிப்பு- எஸ்.ஐஸ்வர்யா, இயக்கம்-பன்னீர்செல்வம்.இந்த படம் மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் விஜய்சேதுபதி மதுரை பகுதி இளைஞனாக நடித்திருக்கிறார். மாடு பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் 29ம் தேதி ரிலீஸாகப் போகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் தான்யா கூறும்போது, “மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறேன். எனது நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார். ஏ.எம்.ரத்னம், “இது பன்னீர்செல்வம் இயக்கத்தில் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்று கூறினார். விஜய் சேதுபதி பேசிய போது, “மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும்…
Read More