04
Aug
'யுவ சாம்ராட்' நாக சைதன்யா ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று, தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர் தொடங்கி இருக்கிறார். அங்குள்ள மீனவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை.. ஆகியவை பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இதன் மூலம் நாக சைதன்யா தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறார். 'கார்த்திகேயா 2' படத்தினை பான் இந்திய அளவில் பிளா க் பஸ்டர் ஹிட்டாக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'NC 23'. இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தினை தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கீதா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் அல்லு…