29
Jun
எப்பேர்பட்ட பிரபலங்களில் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் தான் ரசிகர்களின் மனதில் இடம் என்பது எழுதப்படாத விதி. ஆனால் திறமை இருந்தும் கொண்டாடப்படாத பிரபலங்களில் முதல் பெயராக இசையமைப்பாளர் ‘கார்த்திக் ராஜா’ பெயர் இருக்கும் இன்று அவருக்கு 51வது பிறந்தநாளாகும். கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.நாம் தினசரி கேட்டும் பல பாடல்களுக்கு இவர் தான் இசையமைத்தார் என ஒருவரை நினைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் வேறு ஒருவர் தான் அந்த பாட்டுக்கு சொந்தக்காரர் என்னும் போது அவரின் பாடல்களை தேடிச் செல்வோம். அப்படி…