02
Jan
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான LIGER ( saala Crossbreed )இந்திய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது ! விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட LIGER (Saala Crossbreed) படத்தின் காட்சித்துணுக்கு (glimpse) புத்தாண்டு பரிசாக வெளியாகியுள்ளது. ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கும் அளவிலான அட்ரினலின் பம்ப் செய்யும் MMA சண்டைக் காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வையை இந்த வீடியோ வழங்கியுள்ளது, ‘மும்பை தெருக்களின் சேரி நாயகன்... சாய் வாலா... லைகர்..." அறிமுகத்தை வெளிப் படுத்துவதாக இந்த காட்சித்துணுக்கு அமைந்துள்ளது. தனது ஹீரோக்களை ஸ்டைலான அட்டகாசமான அவதாரங்களில் வழங்குவதில் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன் நாத், இந்த மிகப்பிரமாண்டமான இந்திய பன்மொழி திரைப்படத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத ஸ்டைலான மற்றும் அதிரடி அவதாரத்த்தில் காட்டியுள்ளார். விஜய் ஒரு மிருகம் போல் கூர்மையான உடலமைப்புடன், முற்றிலும்…