18
May
இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த வெப் சீரிஸாக சாதனை படைத்த "ஆஹா கல்யாணம்" என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும் "கன்னி ராசி" என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது. Blacksheep உடைய சொந்த OTT-யான "Bs value"க்காகத் உருவாக்கப்படும் இந்த தொடரை இயக்குநர் அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன்யை கடந்ததோடு, இது YouTube தளத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த தொடர் "என்ன சொல்ல போகிறாய்" புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில் பாராட்டப்பட்ட நடிகராக…