30
Jun
The Nightingale production தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா பேசியதாவது, "அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்" என்றார் இசை அமைப்பாளர் தென்மா பேசியதாவது, "வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. கானாமுத்து வழியாக இந்தப்படம் எனக்கு வந்தது. இந்தப்படத்தின் பாடல்வேலைகள் மிகவும் சவாலாக இருந்தது. சமயமுரளி சாருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. இந்தப் புது படக்குழுவிற்கு இந்தப்படம் நல்ல அடையாளத்தை கொடுக்கும். ஸ்ரீதர் மாஸ்டருக்கு பெரிய நன்றி" என்றார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் பேசியதாவது, "எல்லாருக்கும் வணக்கம்..கனல் படத்தில் நடனம் அமைத்து நடித்ததில் சந்தோஷம். இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் ...…