இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை- காளி வெங்கட்

இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை- காளி வெங்கட்

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். நடிகர் காளி வெங்கட் பேசியதாவது.. இன்னும் அட்வான்ஸ் கூட வாங்கவில்லை ஆனால் நான் பூஜைக்கு வந்துவிட்டேன். ஆனால் முன்னமே இயக்குநர் எனக்குக் கதை சொன்னார், மிகச் சுவாரஸ்யமான கதை. எனது ரோல் அருமையாக இருந்தது. வையாபுரி அண்ணாவுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்த குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். படம் சிறப்பான படமாக வரும் நன்றி. இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா பேசியதாவது.. இயக்குநர் பெண்மையைப் போற்றும் கதாபாத்திரங்கள் எழுதுபவர் மட்டுமல்ல,…
Read More
அமேசான் ப்ரைமில் டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம் !

அமேசான் ப்ரைமில் டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம் !

  இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹர்காரா”. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைம் தளத்தில் இந்திய அளவில் ஹர்காரா திரைப்படம் டாப்டென்னில் நன்காம் இடம்பிடித்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் குடும்ப பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர…
Read More
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் இயக்குனர் விஷால் வெங்கட்டின் இரண்டாவது பட பூஜை !

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் இயக்குனர் விஷால் வெங்கட்டின் இரண்டாவது பட பூஜை !

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள LV Prasad Lab-ல் சிறப்பான பூஜையுடன்  துவங்கியது. இந்நிகழ்வில் இசையமைப்பாளர் இமான் பேசியதாவது, ''GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கொரானா காலத்தில் கேட்டேன். அர்ஜுனின் அநீதி படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார். படம் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன். படத்தின் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் இருக்கும்.…
Read More
யோகிபாபுவின் பிறந்தநாளிற்கு வானவன் படக்குழு அளித்த பரிசு ! பிரபலங்கள் மூலம் வெளியான ‘வானவன்’ டைட்டில்!

யோகிபாபுவின் பிறந்தநாளிற்கு வானவன் படக்குழு அளித்த பரிசு ! பிரபலங்கள் மூலம் வெளியான ‘வானவன்’ டைட்டில்!

  யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தங்கள் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளனர். ‘வானவன்’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை - நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர். கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் மாஸ்குரேட் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர்…
Read More
நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  Sakti Cine Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.   நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது, நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம், அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்,  இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி. நடிகர் காளி வெங்கட் பேசியதாவது.. எனக்கு இது மிக முக்கியமான படம்,  இயக்குநர்…
Read More