களவாணி நடிகர் திருமுருகன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாரதிராஜா!

களவாணி நடிகர் திருமுருகன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாரதிராஜா!

"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார். திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண.விழாவில் இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Read More
‘’பதுங்குவது பாய்வதற்குத்தான்” ; விமலின் அதிரடி இன்னிங்ஸ் ஆரம்பம்…!

‘’பதுங்குவது பாய்வதற்குத்தான்” ; விமலின் அதிரடி இன்னிங்ஸ் ஆரம்பம்…!

வெள்ளந்தியான வேடங்களில் யதார்த்தமாக நடிப்பவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது நடிகர் விமலின் முகம் தான். சமீபகாலமாக விமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ‘புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்’ என்கிற விதமாக உற்சாகமாகவே  இருக்கிறார் விமல்.. இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதே அதற்கு காரணம். இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது என்பது இன்னொரு ஸ்பெஷல்.. இந்தநிலையில் விமல் நேற்று விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல  நடிகர்கள் மற்றும்  இயக்குனர்கள்  பலர் கலந்துகொண்டனர்  அத்துடன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார். தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல். அதனை தொடர்ந்து 'வெற்றிவேல்' பட இயக்குனர் வசந்தமணி…
Read More