16
Oct
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசைவிழா திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது… இயக்குநரை எனக்கு 10 வருடமாக தெரியும் அட்டகத்தி நேரத்தில் என்னிடம் இந்த கதை சொன்னார். அவரிடம் இந்த கதையை படமெடுக்கலாம் என பேசிக்கொண்டிருந்தோம். மிக அழகான காதல்…