வில்லன் நடிகர் லிங்கேஷ் – நாயகன் ஆகிறார்!

வில்லன் நடிகர் லிங்கேஷ் – நாயகன் ஆகிறார்!

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த கதாபாத்திரத்திற்காக ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதா நாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ். கதா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர்போல இருக்கவேண்டுமென்று இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையை குறைத்திருக்கிறார். கலர்புல்லான அதே சமயம் சமூககருத்தையும் பேசுகிற கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும், மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இருக்கும். சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோ ஷூட்…
Read More
கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

'' 'நாசா' வுக்கு எப்படி ஒரே ஒரு 'வாயேஜர்' விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் '' எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் '12.12.1950' படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் நேற்று தங்களது 'வாயேஜர்' விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளி யையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா 'நாசா' விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால…
Read More