01
Mar
இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர்கள் : வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா பல வருடக் காத்திருப்புகளுக்கு பின்னர் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஜோஷ்வா இமை போல் காக்க. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் படம். இதுவரையிலும் முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி இருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அறிமுக நடிகரான வருண் நடிப்பில் வெளிவந்திருக்கிறது இப்படம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தயாரிப்பில் இருந்து படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்த படத்தின் கதையை தெளிவாக சொல்லிவிட்டது. ஹீரோயினை காக்க மொத்த எதிரிகளுடன் ஹீரோ மோதுவது தான் கதை. இதுபோன்ற கதைகள் ஹாலிவுட்டில் அதிகம் வரும். ஆக்சனுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து, கதையை கொஞ்சமாக சொல்லி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கும் படங்கள், சண்டை காட்சி…