19
Nov
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன் எஸ் சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆவர். இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது... திரையுலகில் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் இடையில் விவாதம் இருந்து கொண்டே இருக்கும், நாம் ஆசைப்பட்டு செய்ய வந்த படங்கள் சில சமயங்களில் தான் கிடைக்கும், அந்த மாதிரி படம் மக்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. கார்த்திக் சுப்பராஜ் மாதிரியான இயக்குநர் தொடர்ந்து ஒரே விஷயத்தை…