தாமதமாகும் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம்

தாமதமாகும் கார்த்தியின் ‘ஜப்பான்’ படம்

  ''ராஜுமுருகன்இயக்கிய 'ஜோக்கர்' படத்தை தயாரித்த நிறுவனம் தான் 'ஜப்பான்' படத்தையும் தயாரித்து வருகிறது. கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல், 'புஷ்பா' சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தூத்துக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் கொடைக்கானலிலும் நடந்தது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூலுக்காக வட இந்திய பகுதிகளுக்கு கடந்த மாதமே செல்ல வேண்டியது. ஆனால், திடீரென 'இந்தியன் 2' படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அதில் இருக்க வேண்டிய சூழல் உருவானது. 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து கார்த்தியும், ரவிவர்மனும் நெருங்கிய நட்பில் இருக்கின்றனர். அந்த நட்பில் 'ஜப்பான்' படத்தில் இன்னும் இறுக்கமானது. இதனால் 'இந்தியன் 2'வை ரவி வர்மன் முடித்துவிட்டு வந்த பிறகு 'ஜப்பான்' படப்பிடிப்பை தொடரலாம் என கார்த்தியும் முடிவெடுத்துவிட்டார். இந்த இடைவெளியில் தேதிகளை வீணடிக்காமல், உடனடியாக நலன் குமாரசாமியின் படத்தையும் தொடங்கிவிட்டார். அதன்…
Read More