ஜூனியர் என்.டி.ஆரைத் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக ஜேம்ஸ் கன் கூறியுள்ளார்

ஜூனியர் என்.டி.ஆரைத் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக ஜேம்ஸ் கன் கூறியுள்ளார்

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான `ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்றது. இப்படத்தை ஆஸ்கர் விருதுகள் போட்டியில் இடம்பெறச் செய்ய ஓப்பன் கேட்டகரியில் 'For your consideration (FYC)' என்ற விளம்பர யுக்தி மூலம் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு 'RRR' திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிட்டுக் காட்டி வந்தார் ராஜமெளலி. பல நாடுகளில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. அந்த வகையில் 'Slither', மார்வெல்லின் 'Guardians of the Galaxy' படத்தொடர், 'The Suicide Squad' போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தைப் பார்த்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆரைத் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் இதுபற்றி பேசிய ஜேம்ஸ் கன், "'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கூண்டிலிருந்து புலிகள் எல்லாம் ரிலீஸாகும் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யார் அதில் நடித்த நடிகர், அவர்…
Read More