ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம்

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம்

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது.…
Read More
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் !

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,'' தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு…
Read More