08
Feb
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் செந்தில் பேசியதாவது, நடிகர் செந்தில் பேசும் பொழுது அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். நடிகர் விக்ராந்த் பேசியதாவது, விக்ராந்த் அவர்கள் பேசும் பொழுது தனது சினிமா…