16
Oct
காதல் என்பது சுகமானதுதான் சுவையானதுதான். அதன் விளைவுகள் இன்பமானது தான். ஆனால் அதற்குப் பின் காதலர்களின் குடும்பங்களில் நிகழும் விளைவுகள் பல நேரங்களில் வலி நிறைந்தவை. அப்படி வாழ்வின் வலி நிறைந்த இருள் பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படம்தான் 'ஐஸ்வர்யா முருகன்'. இப்படத்தை 'ரேணிகுண்டா' புகழ் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ளனர். அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை, ஹர்ஷ் லல்வானி ஜி., சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா. இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர். இசை -கணேஷ் ராகவேந்திரா. இவர், ஏற்கெனவே 'ரேணிகுண்டா' படத்திற்கு இசையமைத்தவர். படத் தொகுப்பாளர் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம். கலை இயக்கம் - முகமது. சண்டை இயக்கம் - தினேஷ். இவர் சண்டை இயக்குநர்…