சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumblecore ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dogme 95 ”…
Read More