ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

ஹே ராம் -க்கு பர்த் டே டுடே – கொஞ்சம் பிளாஷ் பேக்!

தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 2000, பிப்ரவரி 18 அன்று வெளியான ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியாகி இன்னியோட 24 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இப்படம் வெளியானபோது விமர்சகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது. அன்று முதல் இன்றுவரை அப்படம் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டுவருகிறது. காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை அம்பலப் படுத்தியதற்காகப் படத்தைப் பலர் பாராட்டினார்கள். இது ‘இந்துத்துவத்துக்கு எதிரான படம்’ என்றும் ‘இந்துத்துவ ஆதரவுப் படம்’ என்றும் இருவேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அடித்தளமிடும் சித்தாந்தம் எப்படி இயங்குகிறது, வெறுப்பு எப்படித் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது, இவற்றால் பயன் பெறக்கூடிய அரசியல் தரப்பினர் யார் என்பதையெல்லாம் விரிவாக விளக்கிய படம் ‘ஹே ராம்’. வாள்களும் துப்பாக்கிகளும் வெறும் கருவிகள்; அவற்றைப் பின்னாலிருந்து இயக்கு பவை வெறுப்பை ஊக்குவிக்கும் சித்தாந்தங்களும் கதையாடல்களுமே என்பதை வலியுறுத்துவதைக் காணலாம். எழுத்தில் வடித்தாலே தவறாக புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை…
Read More
இசைஞானி இளையராஜா விழக்கேற்றி தொடங்கி வைத்த சாரா படத்தின் பூஜை!

இசைஞானி இளையராஜா விழக்கேற்றி தொடங்கி வைத்த சாரா படத்தின் பூஜை!

  Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது. இவ்விழாவினில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு விழக்கேற்றி படக்குழுவினரை வாழ்த்தினார். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா பேசியதாவது… இங்கு வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன் நன்றி. கதாநாயாகன் விஜய்விஷ்வா பேசியதாவது .. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சாரா திரைப்படத்தின் பூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. கார்த்திக்ராஜாவின் இசையில் நான்…
Read More
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு பாடல் ரிலீஸ்!

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வு பாடல் ரிலீஸ்!

திரைத்துறையில் உள்ள மிகப்பெரும் ஆளுமைகள் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, “யார் இந்த பேய்கள்” எனும் ஒரு மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர்.     இசைஞானி இளையராஜா இசையமைப்பில்,  பா விஜய்யின் பாடல் வரிகளில் இந்த மியூசிக் வீடியோ பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்பாடலை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார், சக்தி வெங்கராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். “யார் இந்த பேய்கள்” பாடல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இடையே பயனுள்ள தகவல் தொடர்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது. வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கஷ்டங்களும் வேதனைகளும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள பிரபலங்களை பாதித்தன் விளைவாகவே இந்த விழிப்புணர்வு மியூசிக் வீடியோ வெளிவந்துள்ளது. Images are subject to © copyright to their respective owners. இந்த ஆல்பம் பாடலின் நோக்கம் குறித்து…
Read More
இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக் கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர்  சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள். 'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசைஞானி இளையராஜா எழுதி இருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு இணையதளங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதள…
Read More
பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

கோலிவுட்டில் இசைஞானியான இளையராஜா பிரசாத் தியேட்டரில் இருந்து வெளியேற்றப் பட்ட நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வந்த RR ப்ரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி புதிய இசை ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த புதிய ஸ்டுடியோவில் பூஜை போட்டு தனது படத்தின் பணிகளை இன்று (பிப்ரவரி 3) தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இளையராஜா. அப்போது அவர் பேசியது: "சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராயின. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக…
Read More