“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

  Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் மெர்வின் பேசியதாவது.., ஹிட்லர் எங்க ரெண்டு பேருக்கும் மிக முக்கியமான படம், விவேக் முக்கிய வேலையால் வர முடியவில்லை. இப்படி ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் எங்களைத் தேர்ந்தெடுத்தற்கு இயக்குநருக்கு நன்றி. படம் ஆரம்பித்த முதல் நாளே, எங்களை பாராட்டி ஊக்கம் தந்த, தயாரிப்பாளர் ராஜாவுக்கு நன்றி. படத்தை முடித்து, படம் திருப்தியாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சார் அருமையாக நடித்துள்ளார். கௌதம் மேனன் சார் ரசிகன் நான், அவர் இந்தப்படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் தியேட்டரில் பார்த்து ரசிக்கும்படியான ஆக்சன்…
Read More
விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா.…
Read More