16
Feb
AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளை கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இப்படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து படக் குழுவினரை கௌரவிக்கும் விதமாக மிகப்பிரமாண்ட விழா நேற்று நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னனி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு ஷீல்ட் வழங்கினார்கள். இந்நிகழ்வினில்.. எடிட்டர் மோகன் பேசியது… “AGS உடைய புகழ் காலம் காலமாக நிலைத்து நிற்கும். தனித்துவமான படங்களை அவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். பிரதீப் முதல் படமும் வெற்றியை கொடுத்தார், இரண்டாவது படமும் இன்று வெற்றியை கொடுத்து நாயகனாக இருக்கிறார். இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குநரும் தொழில்நுட்ப கலைஞர்களும் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும்,…