21
Mar
"மக்கள் என்னை நிஜ போலீஸ் என்று நம்பிவிட்டனர்" என்று கூறுகிறார் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் கதாநாயகன் ஷிரிஷ் 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கத்தில், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் 'ராஜா ரங்குஸ்கி'. சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வரும் இந்த ''ராஜா ரங்குஸ்கி' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "ராஜா என்கின்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நான் இந்த ராஜா ரங்குஸ்கி படத்தில் நடித்து வருகின்றேன். வட சென்னையில் உள்ள ஒரு பகுதியில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தி வரும் போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே சிறிய…