24
Apr
தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடியான அஜித்- ஷாலினி தங்களது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். இவங்க லவ் & மேரேஜ் குறித்து கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்சிருக்கும் சேதிகள் கீழே: 1999- ஆம் வருஷம் இருவரும் நடிச்ச அமர்க்களம் படம்தான் இவிய்ங்க காதலுக்கான விசிட்டிங் கார்டு. கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. சைல்ட் ஆர்டிஸ்டாவே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கப் படங்களில் நடிச்சிருக்கார். ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ விஜய்யின் காதலுக்கு மரியாதை. இதுதான் தமிழிலும் ஷாலினிக்கு முதல் படம். இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைஞ்சு நடிச்சார். முன்னரே சொன்னது போல் அதுதான் அமர்க்களம். அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை ஆரம்பமானதும் அந்த படத்தில்தான்.டைரக்டர் சரண் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் அப்போ மறுப்பு தெரிவிச்சுப்புட்டார். அதன் பிறகு அஜித் நேரடியாக பேசவே அவரது…