31
May
“13” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “13”. அறிமுக இயக்குநர் K விவேக் இயக்கத்தில், ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்ததனர். தயாரிப்பாளர் S நந்தகோபால் கூறியதாவது..... “96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” திரைப்படம். 96 படம் ஆரம்பிக்கும்போது இருந்த அதே மகிழ்ச்சியுடன் இதை ஆரம்பித்துள்ளேன். அறிமுக இயக்குனர் விவேக் கதை சொன்ன விதமும், கதையமைப்பும் இந்த படத்தை என்னை தயாரிக்க வைத்தது. கொரோனா காலத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். ரோமியோ-ஜூலியட் மற்றும் 96 போல், 13 திரைப்படமும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.…