08
Mar
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்தை 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், 'டாடி' சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கட்டப்பாவ காணோம்' படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக…